நமது நிருபர்மேற்காசிய போர் பதற்றத்தால் 2 வாரங்களில் 2வது முறையாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு

நமது நிருபர்

மேற்காசிய போர் பதற்றத்தால் 2 வாரங்களில் 2வது முறையாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.317ல் இருந்து 398 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, நம் அண்டை நாடான இலங்கை, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய எரிபொருள் பாஸ் முறை (க்யூஆர் கோர்டு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் பதிவு செய்து, குறிப்பிட்ட அளவு எரிபொருள் மட்டுமே பெற முடியும்.

இந்நிலையில் இன்று எரிபொருள் விலையை 25 சதவீதம் உயர்த்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 2 வாரங்களில் 2வது முறையாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.317ல் இருந்து 398 ரூபாயாக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.79 உயர்ந்து ரூ.382க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்படக்கூடிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் சவாலை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்து இருக்கிறார். சமீபத்திய விலை உயர்வின் மூலம் எரிபொருள் பயன்பாட்டில் 15% முதல் 20% வரை குறையும் என நம்புகிறோம்,’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link