நமது நிருபர்லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின் சொத்து கணக்கு விபரம்

நமது நிருபர்

லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின் சொத்து கணக்கு விபரம் வெளியாகி உள்ளது.

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர், வெவ்வேறு கட்சிகளில் உள்ளனர். அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்துக்கணக்கு விபரம் வெளியாகி உள்ளது.

அசையும் சொத்து விவரம் :

வேட்பாளர் பெயரில்: 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன.

கணவர் பெயரில்: 3262 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன.

அசையா சொத்து

வேட்பாளர் பெயரில்: 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன.

கணவர் மார்ட்டின் பெயரில்: 887 கோடி ரூபாய் மதிப்புக்கு கட்டிடங்கள் நிலம் ஆகியவை உள்ளன.

இது தவிர மகன் ஜோஸ் டைசன் என்பவர் பெயரிலும் 662 கோடி மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன.

தாக்கல் செய்துள்ள சொத்து கணக்கு விபரங்களின்படி தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தான் என்பது தெரியவந்துள்ளது.

Source link