– நமது நிருபர் -அசாமில் பாஜவும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசும் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடும் என

– நமது நிருபர் –

அசாமில் பாஜவும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசும் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அசாம் சட்டசபைக்கு ஏப்.,9 ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்.,23 மற்றும் 29 ம் தேதி இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்.,23 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வேட் வைப் என்ற நிறுவனம் நடத்தியது.அதன் முடிவுகள் சிஎன்என் நியூஸ் 18 வெளியாகி உள்ளது.

தமிழகம்

234 சட்டசபை தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் திமுக கூட்டணி 113- 123 தொகுதிகளிலும்,

அதிமுக- பாஜ கூட்டணி 106 – 116 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடும்.

தவெக 2 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் பணிகள் மிகவும் நன்று என 40 சதவீதம் பேரும், 38 சதவீதம் பேர் மோசம் என தெரிவித்துள்ளனர்.

பெண் வாக்காளர்கள் நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.55 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அரசின் செயல்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். 18 -24 வயதுள்ள வாக்காளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

ஸ்டாலின் முதல்வராக தொடர்வதற்கு 39.9 சதவீதம் பேரும், இபிஎஸ் முதல்வராக தொடர்வதற்கு 37.5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் பெரிய பிரச்னையாக மதுபானம் என 20.1 சதவீதம் பேரும், பெண்கள் பாதுகாப்பு என 17.8 சதவீதம் பேரும், சட்டம் ஒழுங்கு என 17.3 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பின்மை என 15.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம்

126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டசபையில், பாஜ.,80 முதல் 90 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவதுமுறையாக ஆட்சி அமைக்கக்கூடும்.இண்டி கூட்டணி 29 -39 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும். அப்பர் அசாம், லோயர் அசாம் பகுதிகளில் பாஜவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 48 சதவீதம் பேர் தற்போதைய முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா மீண்டும் முதல்வர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரசின் கவுரவ் கோகாய் முதல்வராக 37.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில், 42.7 சதவீத ஓட்டுகளும், எதிர்க்கட்சிகளுக்கு 36.1 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்.

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களுக்கு எதிராக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மிக நன்று என 50.6 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர் மாநில அரசின் செயல்பாட்டிற்கு திருப்தி தெரிவித்துள்ளனர்.36.7 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம்

294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 194 தொகுதிகளில் வெற்றி பெற்று 4வது முறையாக ஆட்சி அமைக்கக் கூடும். பாஜ., 98- 108 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும்.

மம்தா பானர்ஜி முதல்வர் ஆவதற்கு 48.5 சதவீதம் பேரும், பாஜவின் சுவேந்து அதிகாரி முதல்வர் ஆவதற்கு 33.4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க 41.9 சதவீதம் பேரும், பாஜ ஆட்சி அமைக்க 34.9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

43.3 சதவீதம் பேர் அரசின் பணிகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். 20.6 சதவீதம் பேர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 18.3 சதவீதம் பேர் மோசம் எனக்கூறியுள்ளனர்.

Source link