நமது நிருபர் சரிகம நிறுவனம் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது.
இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடை விதிக்கப்படவில்லை என்றால்,சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என நீதிபதி தெரிவித்தார்.
