-நமது நிருபர்-''23ம் புலிகேசி படம் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை

-நமது நிருபர்-

”23ம் புலிகேசி படம் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை நடத்தினார்கள்,” என்று பெரம்பலுார் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் இபிஎஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது;

ஸ்டாலின் எப்போதும் மோடி, பாஜக பற்றி பேசுவார். இபிஎஸ் பாஜக அடிமை என்பார். அவரிடம் பேச வேறு சரக்கு இல்லை. உங்களுக்கு தில்லு இருந்தால் அதிமுக பற்றி பேசுங்கள், பதில் சொல்லத் தயார். அதை விடுத்து மக்களைக் குழப்பினால் 100% தோல்விதான்.

கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று சொன்னார். அந்த காங்கிரசோடு தான் கூட்டணி வைத்துள்ளீர்கள். இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றார், பிறகு எதுக்கு கூட்டணி வைத்தீர்கள்? அவதூறாகப் பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும், நாவடக்கம் தேவை.

ஒரு குடும்பம் வாழ 8 கோடி பேரை சுரண்ட வேண்டுமா? இந்த தேர்தல் திமுக என்ற கட்சிக்கு இறுதி தேர்தலாக இருக்க வேண்டும். இனி குடும்ப ஆட்சி கிடையாது. தமிழக மண்ணில் பிறந்த ஒருவர் தான் தமிழகத்தை ஆள முடியும். 23ம் புலிகேசி படம் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஸ்டாலினும் உதயநிதியும் ஆட்சியை நடத்தினார்கள்.

காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக, இந்தியா மட்டுமல்ல உலகளவில் மெகா ஊழல் 2ஜி. காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போதே ராசா, கனிமொழி ரெண்டு பேரும் திகார் சிறைக்குச் சென்றனர். நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை, இன்னும் வழக்கு முடியவில்லை, எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுக்கப்படலாம்.

போதை பொருள் நிறைந்த மாநிலம் தமிழகம். எங்கே பார்த்தாலும் கஞ்சா. திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்தது. அதிமுக ஆட்சி அமைந்து மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். திமுகவின் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். ஒவ்வொருவர் தலையிலும் பல லட்சம் கடன் சுமை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்டார். தமிழகமே திவாலாகும் சூழல். மக்களின் வரிப்பணம் எங்கே போனது?

அதிக வருவாய் வந்தும் கடன் வாங்குகிறார்கள். பெரிய திட்டம் இல்லை, 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்.

இவ்வாறு பிரசாரத்தில் இபிஎஸ் பேசினார்.

Source link