நல்ல உணவு தர வேண்டும்: மாணவர்கள் போராட்டம்

புதுடில்லி:டில்லியின் மிராண்டா ஹவுஸ் கல்லுாரி மாணவர்கள், தங்களுக்கு நல்ல உணவு வேண்டும் என கோரி, உணவுத்தட்டுகளை தட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, மாணவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தும், இடதுசாரிகள் ஆதரவு பெற்ற, ஏ.ஐ.எஸ்.ஏ., எனும் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஏற்கனவே நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும், காஸ் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிராண்டா கல்லுாரி மாணவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹாஸ்டல் முன் கூடி, உணவு தட்டுகளை தட்டிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் உணவில், மிளகாய் அதிக அளவில் போடப்படுகிறது. சுத்தமான உணவுகள் வழங்கப்படுவதில்லை. காய்ந்த ரொட்டி போன்ற உணவுகள் தான் வழங்கப்படுகின்றன.

எங்களுக்கும் சத்தமான உணவு வழங்கப்பட வேண்டும். சத்தான உணவு சாப்பிடுவது ஆடம்பரமல்ல. அது எங்களின் உரிமை.

உணவு தட்டுகளை தட்டி, சத்தம் எழுப்பியவாறு மாணவர்கள் நடத்திய போராட்டம், சமூக வலைதளங்களில் நேற்று, மாணவர்களுக்குள் வேகமாக பகிரப்பட்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link