நவக்கிரக விநாயகரை வணங்கி பிரசாரம் துவங்கினால் வெற்றி: அமைச்சர் துரைமுருகனின் தேர்தல் சென்டிமென்ட்

வேலுார்: காட்பாடி அருகே உள்ள நவக்கிரக விநாயகர் கோவிலில், அமைச்சர் துரைமுருகன் வழிபாடு நடத்தினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன், பொன்னை அடுத்த ஓட்டனேரி பகுதியில், நேற்று ஓட்டு சேகரித்தார். முன்னதாக அவர், அங்குள்ள நவக்கிரக விநாயகர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார். உடன் சென்ற, எம்.பி.,க்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் வழிபட்டனர்.

தி.மு.க.,வின் சாதனைகளை கூறி துரைமுருகன் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், ”இந்த நவக்கிரக விநாயகர் கோவிலில் வணங்கி, பிரசாரம் தொடங்கினால் வெற்றி நிச்சயம்,” என்றார்.

Source link