நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை? இபிஎஸ் கண்டனம்! – eps slams tvk over sexual harassment allegations against party functionary christopher

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆளுங்கட்சியான தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரைச் சாடி தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்த அந்த மாணவிக்கு உதவுவது போல நடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) குமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளார். தொடர்ந்து காரிலேயே அந்த மாணவிக்கு அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் எழுந்தது.

இபிஎஸ் கண்டனம்

விவரம் பின்வருமாறு,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
“பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெக-வின் காமுக SIR-களால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது

ஆட்சி தான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே “சிங்கப்பெண் அதிரடிப் படை” எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்- உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெக-வினர் என்றால், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.
“நமக்கு நாமே பாதுகாப்பு” என்பதே
இந்த ஆட்சியின் அவல நிலை! என பதிவிட்டு உள்ளார்.

பெண்களுக்கான வேண்டுகோள்

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் இ.பி.எஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில், “உங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெக-வினர் உங்களை நெருங்கினால், உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள். தற்காப்பு உபகரணங்களை எப்போதும் கையில் வைத்திருங்கள். இந்த ஆட்சியில் ‘நமக்கு நாமே பாதுகாப்பு’ என்பதுதான் அவல நிலை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link