நாகர்கோவில்; ''உங்களுக்கு அரசு துணையாக நிற்கிறது. அரசுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்,'' என,

நாகர்கோவில்; ”உங்களுக்கு அரசு துணையாக நிற்கிறது. அரசுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்,” என, நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி கேட்டுக் கொண்டார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ரூ. 91.26 கோடியில் 7601 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 131 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்து துணை முதல்வர் பேசியதாவது:

பொறுப்பேற்ற நாள் முதல், தி.மு.க., அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ‘திராவிட மாடல்’ அரசு சொன்னதையும் செய்தது. சொல்லாததையும் செய்தது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

இந்த அரசு என்றும் உங்களுக்கு துணையாக இருக்கிறது. நீங்களும் அரசுக்கு எப்போதும் உற்ற துணையாக நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link