ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், நாளை (19-07-26) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை சார்பாகக் கூட்டப்பட உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தங்களது இருக்கையை மாற்றித்தர வேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் மாற்றப்பட உள்ளது.
மாநிலங்களவையின் இருக்கையைத் தொடர்ந்து, தற்போது மக்களவையிலும் திமுக நாடாளுமன்ற இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற விதிகளின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி முறிவையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
