நாட்டை துண்டாட முயற்சி: அமெரிக்கா இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு

டெஹ்ரான்: ” ஈரானை துண்டாடி, எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் திட்டமிட்டு உள்ளன,” என ஈரான் கூறியுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்ததொடர்பாளர் இஸ்மாயில் பகேய் கூறியதாவது: ராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து மத்தியஸ்த முயற்சி என்பது பொருத்தமற்றதாக இருக்கும்.ஈரான் தொடர்ந்து தன்னை காத்துக் கொள்ளும்.துருக்கி, சைப்ரஸ் மற்றும் அஜர்பைஜான் நாடுகள் மீது கடந்த வாரம் ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. மாறாக அங்கிருந்து சில தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல், அனைத்து சர்வதேச சட்டங்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது. ஈரானை துண்டு துண்டாக பிரித்து அதன் எண்ணெய் வளங்களை அபகரிக்க நினைக்கிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் சிறந்த மற்றும் நட்பு ரீதியிலான உறவை பேணுவதில் ஈரான் உறுதியாக உள்ளது. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை உள்ளது.

ஈரானில் உள்ள 100க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேநேரத்தில் தாக்குதல் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link