வில்லன் மோகன் ராஜா: தன் தம்பி ரவி மோகனை வைத்து ஜெயம் படம் இயக்கி கோலிவுட்டில் இயக்குரநாக அறிமுகமானவர் மோகன் ராஜா. தொடர்ந்து ரவி மோகனை வைத்து படங்கள் கொடுத்து வெற்றி கண்டார். மோகன் ராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ஆகும். அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக மோகன் ராஜா படம் எதுவும் இயக்கவில்லை.
இந்நிலையில் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் படத்தில் வில்லனே மோகன் ராஜா தான் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதுவும் சாதாரண வில்லன் இல்லையாம். மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு எனும் மோசமான வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. ஹேன்ட்சமான அரவிந்த்சாமியை போய் இந்த மோகன் ராஜா எப்படித் தான் வில்லனாக நடிக்க வைத்தாரோ என தனி ஒருவன் படம் திரைக்கு வருவதற்கு முன்பு ரசிகர்கள் பேசினார்கள்.
படம் பார்த்த பிறகு, அடேங்கப்பா அரவிந்த்சாமி என்ன இந்த அளவுக்கு டெரர் வில்லனாக இருக்கிறார் என்று பாராட்டினார்கள். அந்த சித்தார்த் அபிமன்யு மாதிரி ஒரு கொடுமைக்கார வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம் மோகன் ராஜா. ரவி மோகன் அண்ணனை பார்த்தால் பச்சப்புள்ள மாதிரி இருக்கிறார். அவர் எப்படி கேப்டன் விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் என பேச்சு கிளம்பிவிட்டது.
ஷங்கர் மிஸ்ஸாகிவிட்டார்: பிரமாண்டமாக படம் எடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குநர் ஷங்கரை தலைவர் 173 படத்தில் வில்லனாக பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கத்தை கெடுக்கும் வில்லனாக ஷங்கரை நடிக்க வைக்கிறாராம் சிபி சக்ரவர்த்தி் என்று முன்பு தகவல் வெளியானது. ஆனால் தலைவர் 173 படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவில்லை அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கி வருகிறார். அதனால் ஷங்கர் வில்லனாவது நடக்கவில்லை. இந்நிலையில் மோகன் ராஜா வில்லனாகிவிட்டார்.
வில்லனாக நடிப்பது மோகன்ராஜாவுக்கு கடினமாக இருக்காது. நிச்சயம் அந்த கதாபாத்திரத்தில் அசத்தி கோலிவுட்டின் பயங்கரமான வில்லன்கள் பட்டியலில் சேர்ந்துவிடுவார். இருந்தாலும் தனி ஒருவன் 2 படத்தை இயக்காமல் இப்படி வில்லத்தனம் செய்ய கிளம்பிவிட்டீங்களே சார் என்கிறார்கள் ரசிகர்கள். நல்ல திறமைசாலியான மோகன்ராஜா ஏன் படம் இயக்காமல் இருக்கிறார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.
ரவி வழக்கில் உத்தரவு: இந்நிலையில் ரவி மோகனை நினைத்து அவரின் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்த ரவி மோகன், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தெரிந்த விஷயம் தான்.
கணவரை பிரிந்து மகன்கள் ஆரவ், அயானுடன் தன் அம்மா வீட்டில் வசித்து வரும் ஆர்த்தியோ தனக்கு மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வாங்கித் தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விவாகரத்து வழக்கு தீர்ப்பு அளிக்கப்படும் வரை ஆர்த்திக்கு மாதம் ரூ. 3 லட்சம் கொடுக்க ரவி மோகனுக்கு உத்தரவிட்டுள்ளது. என் பிள்ளைகளை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார் ஆர்த்தி என்று சோகத்தில் இருந்தார் ரவி மோகன். இந்நிலையில் மகன்களை தன் அப்பாவை சந்திக்க அனுமதி அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
Source link
