அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர் பேசுகையில், “நான் பாடல் வரும் சமயத்தில்தான் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பேன்.
நான் அந்தப் பாடலை எப்படி விளம்பரப்படுத்தலாம், எப்படியான வழிகளில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என யோசிப்பேன்.
அதைத் தாண்டி, ரீல்ஸ் கண்டெண்டிற்காக ஒரு பாடல் செய்ய வேண்டும் என நினைத்ததே கிடையாது. ஆனால் உங்களுடைய பாடல்களில் ஹூக் இருக்கிறதே எனக் கேட்டால், அது கண்டிப்பாக பாடல்களில் இருக்க வேண்டும்.
அந்தப் பகுதி மிகவும் பிரஷாக இருக்க வேண்டும் என முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவர், “நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது, தொடர்ந்து நான் கம்போஸ் செய்த பாடல்களை ரஹ்மான் சாருக்கு அனுப்பி மெயில் ஸ்பேம் செய்துக் கொண்டே இருந்தேன்.
அவர் அதைப் பார்த்திருப்பாரா என்று கூடத் தெரியவில்லை. 8-ம் வகுப்பு முடித்த பிறகு, என் பேஷன் மியூசிக்தான், அதனால் என் படிப்புக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.
