நாலே நாளில் ரூ. 200 கோடி வசூலித்த ஜனநாயகன்: விஜய் பவர்னு சொல்லும் தளபதியன்ஸ் – thalapathy vijay last movie jananayagan collects rs. 200 crore in four days

ஜனநாயகன் படம் இந்தியாவில் ரூ. 100 கோடியும், உலக அளவில் ரூ. 200 கோடியும் வசூல் செய்துவிட்டது. ஒரு லீக்கான படம் திரைக்கு வந்த நான்கு நாட்களில் இவ்வளவு வசூலித்திருப்பது சாதாரண விஷயம் இல்லை என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படம் நான்கே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ரூ. 200 கோடி கிளப்
ஜனநாயகன் வசூல் விபரம்

திரைக்கு வந்த நான்காவது நாள் இந்தியாவில் ரூ. 32 கோடியும், உலக அளவில் ரூ. 10 கோடியும் வசூலித்திருக்கிறது விஜய், பூஜா ஹெக்டே மீண்டும் சேர்ந்து நடித்த ஜனநாயகன். சனிக்கிழமை இந்தியாவில் ரூ. 28.90 கோடி வசூல் செய்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அது 10 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனநாயகன் தமிழில் தான் அதிகம் வசூல் செய்து கொண்டிருக்கிறது. இந்தி மற்றும் தெலுங்கில் விஜய் படத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லை.

ரீமேக்கில் விஜய்
பாலய்யா படம்

கெரியரின் உச்சத்தில் இருந்த விஜய் படத்திற்கு வசூல் குறைவாக வருகிறதே என்று மக்கள் பேசுகிறார்கள். ரிலீஸுக்கு முன்பு, ரிலீஸான அன்று என இரண்டு முறை லீக்கான படம் இவ்வளவு வேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்ததே பெரிய விஷயம். விஜய்ணாவை கடைசியாக பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். விஜய் ஏன் தன் கடைசி படத்திற்கு பாலய்யா படத்தை தேர்வு செய்தார்?. பாலய்யாவுக்கு நிகர் பாலய்யா மட்டுமே. அவர் மாதிரி வேறு யாராலும் மாஸ் காட்ட முடியாது. அது தான் ஜனநாயகனுக்கு மைனஸாகிவிட்டது என்று பேசுகிறார்கள் சினிமா ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார்
எடிட் வீடியோ

Source link