சென்னை: ‘தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம், 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 28 முதல் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட், அதாவது 39 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, வேலுாரில் 101; ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
