புதுடில்லி : கடந்த பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மொத்த நிதியாண்டுக்கான இலக்கில் 80.40 சதவீதத்தை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 85.80 சதவீதமாக இருந்தது. நிதி பற்றாக்குறை என்பது, அரசின் வருமானத்திற்கும், செலவிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறிக்கிறது.
நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு 15.58 லட்சம் கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, நிதி பற்றாக்குறை 12.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
