“நியமன எம்.பி.யாக ஹரிவன்ஷ் சிங் நியமனம்”

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக கடந்த 2020ஆம் ஆண்டு பதவியேற்றார். இதனையடுத்து சமீபத்தில் ரஞ்சன் கோகோய் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதே சமயம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின், மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் நேற்றுடன் (09.04.2026) நிறைவடைந்தது. 

இந்நிலையில் ரஞ்சன் கோகாய் மூலம் ஏற்பட்ட மாநிலங்களவையின் காலியிடத்தை நிரப்புவதற்காக, ஹரிவன்ஷ் நாராயண் சிங் பெயரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். அதவாது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 80வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  ஹரிவன்ஷ் சிங்கை மாநிலங்களவைக்கு  நியமிக்கப்பட்ட உறுப்பினராக நியமித்துள்ளார். 

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (10.04.2026) இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. கூடுதல் செயலாளர் ஹித்தேஷ் குமார் பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link