நியூசிலாந்து அணி அபார வெற்றி * 107 ரன்னில் சுருண்டது தென் ஆப்ரிக்கா

ஹாமில்டன்: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் நியூசிலாந்து அணி, 68 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. நேற்று இரண்டாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு கான்வே, லதாம் (11) ஜோடி துவக்கம் தந்தது. ராபின்சன் (1) ஏமாற்ற, நிக் கெல்லி 21 ரன் எடுத்தார். கேப்டன் சான்ட்னர் (20) சற்று உதவினார். கான்வே 49 பந்தில் 60 ரன் எடுத்து கைகொடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 175/6 ரன் எடுத்தது. மெக்கோன்ச்சி (18), கிளர்க்சன் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

லிண்டே ஆறுதல்

தென் ஆப்ரிக்க அணியை துவக்கத்தில் வியான் முல்டர் (16), கோன்னர் (8) ஜோடி கைவிட்டது. டோனி டி ஜோர்ஜி (1) மீண்டும் ஏமாற்றினார். ஹெர்மன் (19), ஜேசன் ஸ்மித் (12), தியான் (10) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் கிளம்பினர். தனி நபராக போராடிய லிண்டே, 12 பந்தில் 33 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.

மற்றவர்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்க அணி 15.3 ஓவரில் 107 ரன்னில் சுருண்டு தோற்றது. நியூசிலாந்தின் பெர்குசன், சியர்ஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர். தொடர் 1-1 என சமனில் உள்ளது.

Source link