நியூசிலாந்து-பாகிஸ்தான் போட்டி ரத்து: 'சூப்பர்-8'ல் மழை தொல்லை

கொழும்பு: நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டி மழையால் ரத்தானது.

இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. நேற்று, ‘சூப்பர்-8’ சுற்று துவங்கியது. இதில் 8 அணிகள், 2 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும்.

இலங்கையின் கொழும்புவில் நடக்க இருந்த ‘சூப்பர்-8’ போட்டியில் (பிரிவு-2) நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றன. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆனால் மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தலா 5 ஓவர் கொண்ட போட்டி நடத்துவதற்கு கூட வழியில்லாமல் போனது. கனமழை நீடித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

‘சூப்பர்-8’ சுற்றுக்கு ‘ரிசர்வ் டே’ கிடையாது என்பதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

Source link