நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய இளைஞர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை

நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய இளைஞர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்தாண்டு ஜன.,ல் இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கினார். விசா மறுப்பு, சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் வெளியேற்றம் என, பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

கடந்த ஓராண்டில் மட்டும், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், 22 லட்சம் பேர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 3,800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த வொடேலா யஷஸ்வி கோத்தப்பள்ளி என்ற இளைஞர் நியூ ஜெர்சி மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை, திருட்டு, பொது ஒழுங்குக்கு கேடு விளைவித்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்க குடியேற்றத்துறை அந்த இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றவாளி என குறிப்பிட்டுள்ளது.

Source link