நியூயார்க்: அமெரிக்காவின், 'கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில்' என்ற நிறுவனம், 'தி கிரேட் ரீ

நியூயார்க்: அமெரிக்காவின், ‘கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில்’ என்ற நிறுவனம், ‘தி கிரேட் ரீ ரூட்டிங் ஆப் குளோபல் பிசினஸ் டேலன்ட்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘கடந்த ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்க பல்கலைகளில், இந்திய மாணவர் சேர்க்கை 45 சதவீதம் குறைந்துள்ளது. மொத்த வெளிநாட்டு மாணவர் சேர்க்கை, 19 சதவீதம் குறைந்த நிலையில், இந்திய மாணவர் சேர்க்கை அதிக சரிவை கண்டுள்ளது.

இது சீனா, தென் கொரியா, ஈரான், சிரியா, நைஜீரியா போன்ற நாடுகளை விட அதிகம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியில் குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதால், கடந்த டிச., நிலவரப்படி, 40 சதவீத சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க விரும்பவில்லை என தெரிய வந்துள்ளது. அத்துடன், ‘எச்- 1 பி’ விசா கட்டுப்பாடுகள், வேலை தேடுவதில் சிரமங்கள் போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Source link