இதைப் பார்த்த சிறை அதிகாரிகள் செல்போன், ஹேர்கிளிப்புகள் அடங்கிய பையை எடுத்து சோதனை செய்தனர். இதில் 8 அங்குலம் கொண்ட கத்திகள், செல்போன் ஆகியவை பச்சை நிற இலையால் சுற்றப்பட்டு இருந்தது. மேலும், போதை ரசாயனங்களால் ஊறிய 5 காகிதத் துண்டுகளை, இரண்டு முடி வெட்டும் கருவிகளான ஹேர்கிளிப்பர்ஸ், சார்ஜர்கள் ஆகியவையும் இருந்தன.
இந்தப் பொருட்களை சுமந்து வந்த மர்ம ட்ரோன், சிறைக்கு வெளியே கீழே விழுந்திருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு போதைப் பொருட்களை சமூக விரோதிகள் ட்ரோன்கள் மூலம் சப்ளை செய்வது பரவலாக உள்ளது. அவ்வாறு இதை யாராவது வீசியிருக்கலாம் என்று மார்சி சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிறை அதிகாரிகளை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
