நிர்வாகிகளுக்கு சொகுசு கார்கள் பரிசு; சிக்கலில் தி.மு.க., – எம்.எல்.ஏ.,?

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வாக தி.மு.க.,வின் கதிரவன் உள்ளார். சமீபத்தில் இவர், கிட்னி முறைகேட்டில் சிக்கினார். இந்த தேர்தலிலும், தி.மு.க., சார்பில் கதிரவனுக்கே ‘சீட்’ கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2021 தேர்தலில், தன் வெற் றிக்காக உழைத்த மண்ணச் ச நல்லுார் தொகுதி தி.மு.க., ஒன்றிய செயலர்கள் ஐந்து பேர், பேரூராட்சி செயலர்கள் இரண்டு பேருக்கு, நேற்றும், அதற்கு முன்னரும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை பரிசளித்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், கார்கள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளதால், ‘அது தேர்தல் விதிமுறை மீறல்’ என திருச்சி கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சரவணனிடம், அ.தி.மு.க., திருச்சி வடக்கு மாவட்ட ஐ.டி., விங் செயலர் நாகராஜன் புகாரளித்தார். இது, எம்.எல்.ஏ., கதிரவனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

நாகராஜன் கூறுகையில், ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், கதிரவன் மீண்டும் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், கார்களுக்கான செலவுகள், அவர் கணக்கில் சேர்க்கப்படும். அவரது வேட்பு மனுவை ஏற்பதிலும் சிக்கல் ஏற்படும்.

‘ ‘இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனருக்கு புகார் அளிக்க உள்ளோம்,” என்றார்.

Source link