நிலமோசடி வழக்கில் வாலிபரை கடத்திய பல் டாக்டர், சிறுவன் உட்பட 9 பேர் கைது

சென்னை: நில மோசடி செய்ததாக, ராமாபுரம் வாலிபரை கடத்தி தாக்கிய பல் டாக்டர், சிறுவன் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ராமாபுரம், செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் அனில்குமார், 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் தாமோதரன்; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

இருவரும் சேர்ந்து, கேளம்பாக்கத்தில், தேவி மற்றும் ராஜு ஆகியோருக்கு சொந்தமான, 4,800 சதுர அடி இடத்தை விற்பனை செய்வதற்காக, அனில்குமார் பெயரில் ‘பவர்’ பத்திரம் பெற்று உள்ளனர்.

அந்த இடத்தை, திருப்போரூரைச் சேர்ந்த பல் டாக்டர் பவா, 35, என்பவருக்கு, விற்பனை செய்வதாக ஒப்பந்தம் செய்து, முன் பணமாக, 11 லட்சம் ரூபாயை ஜனவரி மாதம் வாங்கி உள்ளனர்.

கடந்த 4ம் தேதி அந்த நிலத்தை, பவாவிற்கு கிரையம் செய்து கொடுக்க, கேளம்பாக்கத்தில் உள்ள சார் – பதிவாளர் அலுவலகத்திற்கு அனில் குமார் சென்றார்.

‘ஆவணங்களில் உள்ள குளறுபடியால், பத்திரம் பதிவு செய்ய முடியாது’ என, அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து ஆத்திரமடைந்த பவா, முன்பணமாக கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். பணம் தாமோதரனிடம் இருப்பதாக அனில்குமார் கூறியுள்ளார்.

உடனே, பவா மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை கேட்டு அனில்குமாரை காரில் கடத்தி, கோவளம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அடைத்து வைத்து தாக்கி உள்ளனர்.

பின், அனில்குமாரின் உறவினர்களை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து, அனில்குமாரின் மாமா கண்ணன், 54, என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவத்துள்ளார்.

ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் டவர் அடிப்படை யில், ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனில் குமாரை மீட்டனர்.

கடத் தல் சம்பவத்தில் ஈடுபட்ட, பவா, அவரது சகோதரர்கள் ராஜ்குமார், 31, பரண், 34, நண்பர்களான செங்கல்பட்டைச் சேர்ந்த சதீஷ், 30, வினோத், 26, சாய் ரிஷி, 23, ராகேஷ், 19, விக்ரம், 24, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் எட்டு பேரை தேடி வரு கின்றனர்.

Source link