டெல்லியில் நடைபெறும் நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள் மீதான தடியடி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் விஷயம் கவனம் பெற்றுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு விடாப்பிடியாக இருந்து வருகிறது. ஆனால் இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் படும் சிரமங்கள், பின்னணியில் நடக்கும் முறைகேடுகள் தொடர் சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகின்றன. இந்த சூழலில் சமீபத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. நுழைவுத்தேர்வு எழுத அனுமதிக்கும் போது கடும் சோதனைகளுக்கு மாணவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். ஆனால் அந்த மாணவர்கள் எழுதும் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்க்க முடியாதது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
விஸ்வரூபம் எடுக்கும் நீட் வினாத்தாள் கசிவு
ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் மாணவ, மாணவிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் சமீபத்திய நீட் வினாத்தாள் கசிவு விஷயம் மாணவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் முக்கியமான பதிவை பகிர்ந்திருக்கிறார்.
இந்தியா கூட்டணியில் திமுக இல்லை! தவெக நிலை என்ன?
மு.க.ஸ்டாலின் நீட் எதிர்ப்பு பதிவு
அதில், டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக நடைபெறும் மாணவர்கள் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம். அதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கின்றன என்று முதன்முதலில் எச்சரித்ததே திமுக தான். இதன் காரணமாக தான் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். இந்த தேர்வால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று சுட்டிக் காட்டி வருகிறோம். சமூக நீதியில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது. இத்தகைய சூழலில் இங்கிருந்து ஒலிக்கும் முக்கிய கோரிக்கை என்பது நீட் தேர்வை ரத்து செய்து விடுங்கள். தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் அடிப்படையான கோரிக்கையே இதுதான். நீட் தேர்வை ரத்து செய்வதே ஒன்றே, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி என்று தெரிவித்துள்ளார்.
நீட் மரணங்கள் – தமிழகத்தில் தீராத துயரம்
நீட் தீராத வலி தமிழகத்தில் நீட் தேர்வால் ஏராளமான வலிகளையும், வேதனைகளையும் மாணவர்களும், பெற்றோர்களும் அனுபவித்து வருகின்றனர். தொடர் தற்கொலை சம்பவங்கள் அரியலூர் அனிதாவில் தொடங்கி தற்போது வரை 25க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் எங்காவது தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் முழுமையான தன்னம்பிக்கையை விதைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பாதிக்கப்படும் மாணவர்கள் நீட் தேர்வால கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர். நீட் விலக்கு மசோதா இந்த விவகாரத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் பலமுறை மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருத்துவ படிப்பில் சேரும் வழி தற்போதைய சூழலில் நீட் தேர்வை தவிர்க்க முடியாது. இது ஒன்றே இளங்கலை மருத்துவ படிப்பில் சேர ஒரே வழி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு
எனவே அரசு பள்ளி மாணவர்களை தூக்கிவிடும் வகையில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சிறப்பு உள் ஒதுக்கீட்டில் சேர முடியும். கடந்த 6 ஆண்டுகளாக இந்த ஒதுக்கீடு ஆறுதல் அளித்து வருகிறது. இருப்பினும் நிரந்தர தீர்வை நோக்கிய நகர்வில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Source link
