நீண்ட போராட்டத்துக்கு பின் ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் என்.எஸ்.இ.,

நீ ண்ட நெடியதொரு போராட்டத்தை சந்தித்து, இறுதியாக புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கிறது தேசிய பங்கு சந்தை. இந்த பங்குகளை கையில் வைத்திருப்போர் அவற்றை விற்பதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக இதை கருதுவது ஒருபுறமிருக்க, இவற்றை வாங்கி தங்களுடைய முதலீட்டை வலுவாக்கி கொள்ள விரும்புவோர் மறுபுறமிருக்க, எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் அதிகரித்து வருகின்றன.

அடுத்த சில மாதங்களில் பங்கு வெளியீடு சம்பந்தமான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக, நிறுவனம் மற்றும் பங்கு வெளியீட்டுக் கான அதன் முயற்சிகள் குறித்த ஒரு அறிமுகப் பார்வை…

* புதிய பங்குகள் வெளியிடும் திட்டமில்லை

* முழுதும் ‘ஆபர் பார் சேல்’ மட்டுமே

* கிட்டதட்ட 5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை

*புதிய பங்குகள் வெளியிடப்படாததால், திரட்டப்படும் தொகை நிறுவனத்துக்கு சேராது

* பட்டியலிடப்படாத நிறுவன சந்தையில், தற்போது இதன் பங்கு விலை 2,000 ரூபாய்க்கும் மேல்

* பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின், 3,000 ரூபாய் வரை உயர வாய்ப்பு.

உலக அளவில் பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகள் மிகக்குறைவு என்பதால், முதலீட்டாளர்கள் இதை ஒரு பொக்கிஷமாக பார்ப்பார்கள். -தேவன் சோக்ஸி, நிறுவனர், டி.ஆர்.சோக்ஸி, பின்சர்வ் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மிக முக்கியமான முதலீட்டு மையமாக இந்தியா மாற இது ஒரு பெரிய வாய்ப்பு. -நிரேன் ஷா, இந்திய பிரிவு தலைவர், நார்வெஸ்ட் இந்தியா உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு என்.எஸ்.இ-.,யை ஒரு முன்மாதிரி சந்தையாக மாற்றுவதே அடுத்த இலக்காக இருக்க வேண்டும். -அஜய் கார்க், இணை நிறுவனர், ஈக்யுரஸ் கேபிடல் பங்குச் சந்தை குறியீட்டை விட, அந்த சந்தையை நடத்தும் நிறுவனங்கள் எப்போதும் அதிக லாபம் ஈட்டுகின்றன. -விஜய் மந்திரி, நிறுவனர், மந்திரி பைனான்சியல் சர்வீசஸ்

ஐ.பி.ஓ.,வில் இந்தியா முதல் இடம் (2025) நாடுகள் ஐ.பி.ஓ., எண்ணிக்கை இந்தியா 367 அமெரிக்கா 223 சீனா 219 ஹாங்காங் 100 தென்கொரியா 76

உலக பங்குச்சந்தைகளின் பி/இ., விகிதம் பி.எஸ்.இ., 52.2 லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 40 ஹாங்காங் 39.1 டி.எம்.எக்ஸ் கனடா 35.3 ஜப்பான் எக்ஸ்சேஞ்ச் 27.6 என்.ஒய்.எஸ்.இ., 26.4 நாஸ்டாக் 25.7

நீண்ட பயணம் 2016 டிசம்பர்: ரூ.10,000 கோடி திரட்ட செபிக்கு ஐ.பி.ஓ., விண்ணப்பம் 2017: விசாரணை தீவிரம். ஐ.பி.ஓ., நிறுத்தம். | 2019 ஏப்ரல்: குறைபாடுகளை சுட்டிக்காட்டி 24 மாதத்தில் தீர்க்க உத்தரவு 2017-2022: முயற்சிகளில் பின்னடைவு 2024 ஆகஸ்ட்: மீண்டும் செபியிடம் விண்ணப்பம் 2026 ஜனவரி 30: செபி தடையில்லா சான்று வழங்கியது 2026: ரூ. 22,500-23,000 கோடி திரட்ட திட்டம்

7 – 9 மாதங்கள் ஆகலாம் அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளும் கிடைத்து, பட்டியலிடுவதற்கு, கிட்டத்தட்ட 7 – 9 மாதங்கள் ஆகலாம்.

Source link