ஜூலை 20 முதல் மசினகுடி அருகே உள்ள மாயார், சிங்காரா, பொக்காபுரம் சாலைகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் சென்றுவர இன்று முதல் தடை விதித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசினகுடி, மாயார், சிங்காரா சாலை
குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கல்லட்டி, மசனகுடி ,சிங்காரம் ,மாயா, தெப்பக்காடு, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மலைபாதை சாலைகள் அமைந்துள்ளது.குறிப்பாக இந்த சாலைகளில் அபாயகரமான சரிவுகள், 36 குறுகிய வளைவுகளை கொண்டு உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந் த நிலையில் விபத்துகளைத் தடுக்க, ஊட்டியில் இருந்து மசினகுடி நோக்கி இறங்கும் வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் வாகனங்கள் இரு வழிகளிலும் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், மசினகுடியில் இருந்து ஊட்டி நோக்கி மட்டும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தன.
முதுமலைக்கு சொந்த வாகனங்களில் செல்ல தடை..
மேலும் இந்த சாலை பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக நடமாடக்கூடிய இடமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி முதுமலை செல்வதற்காக சுற்றுலாப் பயணிகள் இந்த வழிகளை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அப்போது மான் ,கரடி ,புலி ,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலை ஓரத்தில் இருக்கும்போது சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட சில அந்த வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.
தவெக கூட்டணி உருவாகக்கூடாது? திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்?
இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சாலைகள் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உள்ளூர் மக்களை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மசினகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற இணைப்புச் சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
வனத்துறை முக்கிய அறிவிப்பு
ஆனால் நீதிமன்றத்தின் தடை இதனால் வரைக்கும் அமல்படுத்தாமல் இருந்து வந்தது .இந்த சூழலில், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை உத்தரவு இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசனகுடி சிங்காரம் மாயா மற்றும் வெகாபுரம் விபூதி மலை சாலையில் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் புதிய விதிமுறை அமல்
இது குறித்து வனத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :
வனத்துறை அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் ஜீப் களில் வந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லலாம் ஆனால் சுற்றுலா பயணிகள் தங்களுடைய வாகனங்களில் இந்த வழியாக செல்ல அனுமதி இல்லை. ஜூலை 20 முதல் மசினகுடி அருகே உள்ள மாயார், சிங்காரா, பொக்காபுரம் சாலைகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சுற்றுலா பயணிகள், வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் ஜீப் சஃபாரி வாகனங்கள் மூலம் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அவர்களது வாகனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link
