நீலகிரி: கூடலூரில் செல்பி எடுக்க முயன்ற போது, 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை, 13 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊசிமலை காட்சி முனைக்கு, நேற்று (மார்ச் 19) மதியம் சென்ற, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், 28, என்பவர் தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், இரவு நேரம் ஆனதால், தீயணைப்பு துறையினர், குன்னூர் ராணுவ மீட்பு குழு உதவியை நாடினர். சுமார் 13 மணிநேரம் போராடி இன்று, அதிகாலை 4.30 மணிக்கு சிவகுருநாதன் பத்திரமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, செல்பி எடுப்பதற்காக சவாலான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
