‘நீலம்’ நிறுவனத்தில் ஜி.வி பிரகாஷ்; பா.ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹாப்பி ராஜ்”. சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடம், கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கு முன்பாகவும் இவர் நடித்திருந்த பல படங்களும், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இருந்த போதிலும், இவர் தொடர்ந்து இசையமைப்பாளராகப் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கு என வெவ்வேறு மொழிகளில் பல படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள போதிலும், படங்களில் தொடர்ந்து நடிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். 

அந்த வகையில், இவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை, பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு ‘வேட்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, நீலம் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களைப் பேசுவதாகவும், பொது வெளியில் விவாதங்களை உருவாக்குவதாகவும் இருக்கும். இதனிடையே, ஜி.வி பிரகாஷ் இந்த கூட்டணியில் இணைய இருப்பதால், படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.   

Source link