நுாறு… ரொனால்டோ ஜோரு

ரியாத்: சவுதி புரோ லீக் கால்பந்து அரங்கில் தனது நுாறாவது போட்டியில் விளையாடிய ரொனால்டோ 2 கோல் அடித்தார்.

சவுதி அரேபியாவில், புரோ லீக் கால்பந்து 69வது சீசன் நடக்கிறது. ரியாத்தில் நடந்த லீக் போட்டியில் அல்-நாசர், அல்-நஜ்மா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த அல்-நாசர் அணி 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அல்-நாசர் அணிக்காக விளையாடிய போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார்.

தொடர்ச்சியாக 13வது வெற்றியை பதிவு செய்த அல்-நாசர் அணி, இதுவரை விளையாடிய 27 போட்டியில், 23 வெற்றி, ஒரு ‘டிரா’, 3 தோல்வி என, 70 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் அல்-ஹிலால் (64 புள்ளி), அல்-அஹ்லி (62) அணிகள் உள்ளன.

தொடையின்பின்பகுதி காயத்தில் இருந்து மீண்ட ரொனால்டோ 41, இரண்டு மாத ஓய்வுக்கு பின் மீண்டும் களமிறங்கினார். இது, சவுதி புரோ லீக் தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ பங்கேற்ற 100வது போட்டி. ‘நடப்பு சீசனில்’ 23 கோல் அடித்துள்ள ரொனால்டோ, அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். சவுதி புரோ லீக் அரங்கில் 97 கோல் பதிவு செய்துள்ள ரொனால்டோ, ஒட்டுமொத்த கால்பந்து வரலாற்றில் 967 கோல் அடித்துள்ளார்.

Source link