ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர் எளிதில் முடிந்துவிடும் – இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான ‘உடனடி’ போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகுஇதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.”போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்” என்று கோபப்பட்டு இருக்கிறார்.முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள்.
Source link
