நெதர்லாந்து டைனோசர் தோல் கைப்பை ஏலம் ரூ.5 கோடியாக விலை நிர்ணயம்

ஆம்ஸ்டர்டாம்:அறிவியலும், பேஷனும் இணைந்து வித்தியாசமாக உருவாக்கிய டைனோசர் தோல் கைப்பை ஒன்று நெதர்லாந்தின் ‘ஆர்ட் ஸூ’ மியூசியத்தில் ஏலத்திற்கு வருகிறது.

உலகில் வாழ்ந்த அரிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து 6.6 கோடி ஆண்டுகள் ஆன நிலையில், அதன் எச்சங்களை வைத்து ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகின்றன.

அதன்படி, ‘டி- ரெக்ஸ்’ எனப்படும் பயங்கரமான டைனோசரஸ் ரெக்ஸ், டைனோசரின் படிமங்களில் இருந்து எடுக்கப்பட்ட எச்சத்தை பயன்படுத்தி, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட தோலால் ஒரு கைப்பை தயாரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான டைனோசர் தோல் அல்ல, ஆனால் அதன் புரத அமைப்பை அடிப்படையாக கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ‘ஆர்ட் ஸூ’ மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பை அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. இதன் ஆரம்ப விலை, 5 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link