நெய்வேலி: துரோகத்துக்கு இலக்கணமானவர்கள் ஸ்டாலினும் கருணாநிதியும் தான். எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதையில்லை என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
நெய்வேலியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார், புலம்புகிறார். மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டதால் உளறுகிறார். ஸ்டாலின் கருணாநிதிக்கு நான் இடம் கொடுக்கவில்லை என்று விமர்சிக்கிறார்.கருணாநிதி முதல்வராக இறக்கவில்லை எம்.எல்.ஏவாக இருந்தார். ஆனாலும் கிண்டியில் 2 ஏக்கர் நிலம் கொடுத்தோம். 200 கோடி போகும், அதுக்கு முன்பு ஜெயலலிதா மறைந்தபோது எம்ஜிஆர் இடத்துக்கு அருகில் இடம் கொடுத்தோம். அதை எதிர்த்து வழக்கு போட்டார்கள். வழக்கு இருக்கும்போது எப்படி அனுமதி கொடுக்க முடியும்? அதையும் நான் சொன்னேன். சட்டரீதியாக அனுமதி கொடுக்க முடியாத நிலையில் இருந்தோம். இப்போது ஸ்டாலின் இப்படி சொன்னால் நியாயமா? காமராஜர், ஜானகி இருவருக்கும் கருணாநிதி மெரினாவில் இடம் கொடுக்கவில்லை.
இபிஎஸ் பேசுகிற பொய்யை புத்தகமாக வெளியிடலாம் என்று ஸ்டாலின் பேசுகிறார். உங்களுக்கு என்ன தெரியபோகிறது..? எழுதிக் கொடுப்பதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்க அப்பாவும் ஸ்டாலினும் உதயநிதியும் சொல்லும் பொய்யை பெரிய புத்தகமாக வெளியிடலாம். மீனவர்களுக்கு துரோகம் செய்தது கருணாநிதி, கச்சத்தீவை தாரை வார்த்தது,. காவிரி நதி நீர் பிரச்னைக்கு, முல்லை பெரியார் பிரச்னைக்கு, தொப்புள் கொடி உறவு ஈழத்தமிழருக்கு துரோகம் செய்தது, எல்லாம் திமுக. விவசாய பூமி மீத்தேன் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்கள், அதை தடுத்தது அதிமுக அரசு. நீட்டுக்கு கையெழுத்து போட்டது மாணவர்களுக்கு செய்த துரோகம். ஆக துரோகத்துக்கு இலக்கணமானவர்கள் ஸ்டாலினும் கருணாநிதியும் தான். எங்களை பற்றி பேச அருகதையில்லை.
அதிமுக 10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும் என்று சொன்னோம், ஸ்டாலின் கூப்பன் கொடுக்குறார் என்றால், அதை யார் கொடுப்பார்? திமுககாரன் கொடுப்பான், அதுக்கு கமிஷன் கேட்பான். அந்த கமிஷன் ஒரு பகுதி ஸ்டாலின் குடும்பத்துக்கு போகும். அவர் ஆட்சிக்கு வரப்போவதில்லை, அதுவேறு விஷயம், இது ஸ்டாலின் போடும் சூழ்ச்சி. இந்த தேர்தலில் திமுக காணும் வீழ்ச்சி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர் மனைவி திமுகவுடன் சேர்ந்திருக்கிறார். கருணாநிதி இருக்கும் மேடையில் விஜயகாந்தை வடிவேலு கொச்சைப்படுத்தினார். எப்படி கூட்டு வைத்தார்கள் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கவில்லை என்றார் அது தவறு, 2026 தேர்தலை எங்களுடன் சந்தித்தால் வழங்கப்படும் என்றேன், நீங்க ஏதேதோ திட்டமிட்டு போயிருக்கிறீர்கள், அது உங்கள் சொந்த விஷயம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
