நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்கு கட்டுப்பாடு தளர்வு

இனி இந்தியாவின் ரூ.200, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தலாம் 

நேபாளத்தில் நீண்ட காலமாக அமலில் இருந்த இந்திய ரூபாய் நோட்டு கட்டுப்பாடுகள் அதிகாரப்பூர்வமாகத் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 2016 பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, 100 ரூபாய் வரையிலான நோட்டுகளுக்கு மட்டுமே நேபாளத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்து.

இந்த நிலையில், இந்தியாவில் 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த நேபாள ராஷ்ட்ரா வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி இனி, இரு நாட்டு குடிமக்களும் பயணம் செய்யும்போது 100 ரூபாய்க்கு மேற்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“நௌல்” புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து கனமழை 

தென் சீனாவில் நௌல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். குவாங்டாங் மாகாணம் ஹுய்சோ ((Huizhou)) நகரில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, பலத்த காற்று வீசியதோடு, கனமழையும் பெய்தது.

அதேபோல, சீனாவின் கான்சு ((Gansu)) பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை ஆய்வு செய்யவும், உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவவும் ஒரு பணிக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

மசூதிக்கு தீ வைத்த இஸ்ரேலியர்கள் 

ஆக்கிரமிப்பு மேற்கு கரையின் குஸ்ரா ((Qusra))குக்கிராமத்தில் உள்ள அல் – ரக்மா மசூதிக்கு இஸ்ரேலிய குடியேறிகள் தீவைத்ததால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது.

மசூதியின் சுவர்களில் ஹீப்ரூ மொழியில் மிரட்டல் வாசகங்களை எழுதி வைத்து விட்டு குடியேறிகள் தீ வைத்த நிலையில், மசூதி முழுவதும் பற்றி எரிந்தது. மேற்கு கரை முழுவதும் நூற்றுக் கணக்கான பாலஸ்தீனர்களை கைது செய்த பின் இஸ்ரேலிய குடியேறிகள் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

Source link