காத்மாண்டு: நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்த பின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால், அப்போதைய பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
இதையடுத்து, நேபாளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
கடும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு கோடியே 89 லட்சம் வாக்காளர்கள், 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மன்னராட்சியை ஆதரிக்கும் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி, காத்மாண்டு முன்னாள் மேயர் பாலெனை, 35, பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்– லெனினிஸ்ட் கட்சியில் மீண்டும் கே.பி. சர்மா ஒலியே பிரதமர் வேட்பாளராக நிற்கிறார்.
அங்கு மாற்றம் விரும்புவோர், இளம் தலைவர்கள் வர விரும்புகின்றனர். கடந்த 2008ல் ஒழிக்கப்பட்ட மன்னராட்சி திரும்ப வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
