நேபாளத்தில் பஸ் கவிழ்ந்தது; தமிழக பக்தர்கள் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில், தமிழக பக்தர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

நேபாளத்தில் 16 பக்தர்களை ஏற்றிச் சென்ற மின்சார பஸ் கண்டகி மாகாணத்தில் கோர்கா மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மனகாமனா கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பஸ் விபத்தில் சிக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்தில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் முத்துக்குமார் (58), மீனாட்சி (59), சிவகாமி (53), மீனா (58), தமிழரசி (60), அனமாலிக் (58), விஜயா (57) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்களில் பஸ்சின் உதவியாளர் ஒருவர். பஸ் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Source link