நேப்பிடோ: மியான்மர் ராணுவ தளபதியான மின் ஆங் ஹ்லாயிங் ,69, அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

நேப்பிடோ: மியான்மர் ராணுவ தளபதியான மின் ஆங் ஹ்லாயிங் ,69, அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல், ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கவிழ்த்தது. அதன்பின், ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லாயிங் ஆட்சியை கைப்பற்றினார். கடந்த ஆண்டு டிச., மற்றும் இந்தாண்டு ஜனவரியில், மியான்மர் பார்லி.,க்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது.

மொத்தம், 584 இடங்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. மீதமுள்ள இடங்கள் ராணுவத்தால் நேரடியாக நியமிக்கப்பட்டன. சமீபத்தில், நாட்டின் அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது.

இதில் மொத்தமுள்ள, 584 ஓட்டுகளில், 429ஐ பெற்று ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லாயிங் வெற்றி பெற்றார்.

அதிபர், ராணுவ தளபதி ஆகிய பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்க முடியாது என்பதால், ராணுவ தளபதி பதவியை மின் ஆங் ஹ்லாயிங் ராஜினாமா செய்தார்.

இந்த பதவியில் தனக்கு நெருக்கமானவரை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

Source link