நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 18), கிராம், 14,570 ரூபாய்க்கும், சவரன், 1,16,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (மார்ச் 19) காலை தங்கம் விலை, கிராமுக்கு, 270 ரூபாய் குறைந்து, 14,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,160 ரூபாய் சரிவடைந்து, 1,14,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை மீண்டும், தங்கம் விலை கிராமுக்கு, 400 ரூபாய் குறைந்து, 13,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,200 ரூபாய் சரிவடைந்து, 1,11,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 5,360 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிந்தது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (மார்ச் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் இன்று உயர்வை கண்டுள்ளது.

வெள்ளி சரிவு

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Source link