படப்பிடிப்பு தளத்தில் அரசு பள்ளிக்கு உதவிய படக்குழு!

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம் ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஐ. எம்​.​விஜயன், சிங்​கம்​புலி, தீபா சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். டி.இ​மான் இசையமைக்​ககும் இப்படம் பெண் உரிமை​களை மைய​மாக கொண்டு ஒரு சமூக கருத்து கொண்ட படமாக உருவாகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம்  தொடங்கியது. கேரளா, தேனி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பெண்கள் தினத்தன்று வெளியானது. அதில் ஒடுக்கப்பட்ட பெண்கள் சோகத்துடன் நிற்க உறியடி விஜய்குமார் ஒரு ஆசிரியர் போல் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் உறியடி விஜய்குமாரின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு பகுதிகளில் நடைபெற்றது. அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது. இதனால் தயாரிப்பாளர் சாய் வினோத் ஜெயக்குமார் அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி, குடிநீர் வசதி மற்றும் தினசரி கல்வி வசதி ஆகியவைகளை வழங்க முன்னெடுப்பு எடுத்து மறு சீரமைத்துள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Source link