நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த விழாவில் 37 ஆயிரத்து 877 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. விழாவில் 871 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
டிஜிபி மகேஷ்குமார்
இதனிடையே, தமிழக டிஜிபி மகேஷ்குமார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற இருந்தார். அவர் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
விளக்கம்
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் டிஜிபி மகேஷ்குமார் பங்கேற்கவில்லை. காவல்துறை ஆலோசனை கூட்டம் மற்றும் அலுவலக பணிச்சுமை காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கமுடியவில்லை என்று டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நெல்லை, கடையம் எம்.எல்.ஏ.க்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
