பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

‘தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.’

Chennai NIFT Fashion Show

சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (National Institute of Fashion Technology – NIFT) சார்பில் பிரமாண்டமான ஃபேஷன் எக்ஸிபிஷன் நடைப்பெற்றது. இவர்களோடு தஸ்தகாரி ஹாட் (Dastkari Haat) என்ற அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

கண்காட்சியில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள், பாரம்பரிய ஆபரணங்கள், கண்ணாடி கலைப் பொருட்கள், மர வேலைப்பாடுகள், மணிகள், சங்கிலிகள், கலை நகைகள் என விதவிதமான கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கட்டிருக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

வண்ணமயமான கண்ணாடிப் பூக்கள், பறவைகள் என குழந்தைகள் பேவரேட் லிஸ்ட் ஒருபுறமும், தெய்யம், நாட்டார் கலை வடிவங்கள் என கண்காட்சியில் ஒவ்வொன்றும் நம்மை ஈர்க்கின்றன.

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் இந்தத் துறையில் முக்கியமான நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு, ஃபேஷன் டிசைனிங், டிப்ளோமா இன் ஃபேஷன், ஜுவல்லரி டிசைன் (JD), ஃபேஷன் டெக்னாலஜி (FD) போன்ற பல்வேறு ஃபேஷன் சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள், குறிப்பாக ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அதிகமாகப் பார்வையிட்டு வருகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

இந்த நிகழ்வினை, தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.

இந்த ஃபேஷன் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, கைவினை, ஃபேஷன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கண்காட்சி நிச்சயமாக விருந்தாக அமைந்துள்ளது.

– தீபன் சேகுவேரா, அலமேலு

Source link