பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்: இணை அதிகாரி சரத் ஆய்வு

திருப்பதி,

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஏ.சரத் ஆய்வு மேற்கொண்டார்.

பிரம்மோற்சவ விழா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் டிசம்பர் மாதம் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முன்னதாக 5-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஏ.சரத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகன மண்டபம், நான்கு மாட வீதி, பார்க்கிங் ஏரியா, புஷ்கரணி, பக்தர்கள் வரிசை பகுதி, அன்னபிரசாதம் மற்றும் லட்டு டிக்கெட் கவுண்ட்டர் ஆகியவற்றை பார்வையிட்டு, கருட வாகனம், கஜ வாகனம், தேர் ரதம் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஒரு வாரத்தில் பணிகளை முடிக்க உத்தரவு

ஒரு வாரத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, கோவிலில் மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்ய அறிவுறுத்தினார். பிரம்மோற்சவ விழாவின்போது, ​​பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி, வசதியாக தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பக்தர்கள் இந்த பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் அருள் பெற்று செல்லுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆய்வின்போது தேவஸ்தான தலைமை பொறியாளர் மோகன்ராம், துணை நிர்வாக அதிகாரிகள் ஹரிந்திர நாத், செல்வம் மற்றும் அதிகாரிகள் வெங்கடேஸ்வரலு, கிரிதர் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link