“பனையேறும் தொழிலாளர்களை போலீஸ் தேடித் தேடி வேட்டையாடுவது வெட்கக் கேடானது”

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல் துறை, பனையேறும் தொழிலாளர்களைத் தேடித் தேடி வேட்டையாடுவது வெட்கக் கேடானது.

அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால், சட்டம் – ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும். சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும்.

ஆகவே, திருச்சி மாவட்டம் இலால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்டதற்காக, பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பனைத் தொழிலாளர்களையும் தமிழ்நாடு காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link