சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக மங்களூருவில் இருந்து எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, மங்களூருவில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06128) இயக்கப்படுகிறது. அதே போல, எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு மங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (06153) இயக்கப்படுகிறது. மங்களூருவில் இருந்து வருகிற 15-ந்தேதி மாலை 4 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06154) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
