இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர். அபாரமாக ஆடிய சபலென்கா 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பேயர்ன் முனிக் கலக்கல்
பெர்கமோ: இத்தாலியில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடருக்கான ‘ரவுண்டு-16’ முதல் போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), அடலாண்டா (இத்தாலி) அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பேயர்ன் முனிக் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயினில் நடந்த போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணி 5-2 என, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலாந்து) அணியை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* ஆமதாபாத்தில், வரும் ஏப். 1-10ல் ஆசிய பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்க இருந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இத்தொடர் வரும் மே 12-17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
* புரோ கபடி லீக் தொடருக்கான குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வீரர் ரந்திர் சிங் ஷெராவத் நியமிக்கப்பட்டார். இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (1988), தெற்காசிய விளையாட்டு (1989), ஆசிய விளையாட்டில் (1990) தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
* கொல்கட்டாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6-2, 4-6, 6-4 என, சகவீரர் சசிகுமார் முகுந்தை வீழ்த்தினார்
