பரீதாபாத் : கடந்த திங்கள் கிழமை, பரீதாபாத் அருகே உள்ள கிர்த்வார் காலனியை சேர்ந்த ஜெய்சிங் பைஸ்லா, 34, என்பவர், தன் நண்பர் ஒருவருடன் பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று, கத்தி மற்றும் அரிவாளால் பைஸ்லாவை வெட்டிக் கொன்றது. அது குறித்து விசாரித்த டி.எல்.எப்., போலீசார், அந்த நாளிலேயே, இரண்டு சிறார்களை கைது செய்தனர்.
நேற்று முன்தினம், ஹிமான்சு மற்றும் துஷார் என்ற, 19 வயது நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெண் தகராறில் கொலை நடந்ததாக தெரிய வந்தது.
அதுபோல, மேற்கு டில்லியின், மோதி நகர் பகுதியில், 22 வயது நபரை, கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக, நான்கு சிறார்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
டில்லியில், சமீப காலமாக நடந்து வரும் கொலைகளில், சிறார்கள் பலர் கைது செய்யப்படுவது, கவலையளிக்கக் கூடியதாக போலீசார் கூறினர்.
