பருவமழையால் 14 பேர் உயிரிழப்பு – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் – 14 deaths due to monsoon – disaster management minister sengottaiyan

சென்னை எழிலாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மழைநீர் தேக்கமடைந்த பகுதிகளை கண்டறிந்து களைய நடவடிக்கை

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை உடனடியாக கண்டறிந்து அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் இந்த அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சாலைகளில் தேங்கி இருந்த மழைநீர் நான்கு மணி நேரத்திலே அகற்றப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் 62 இடங்களில் நிலச்சரிவு

நீலகிரி மாவட்டத்தின் 62 இடங்களில் நிலச்சரிவுஏற்பட்டு இருப்பதாகவும் , அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சில இடங்களில் பணிகள் நிறைவு பெற்று மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதாகும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் இருவர் மட்டுமே இருந்ததாகவும் அதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகும், நடத்துனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக நான்கு லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பருவ மழையால் தற்போது வரை 14 பேர் பலி

பருவ மழையால் இடி, மின்னல் தாக்கி தற்போது வரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஒரு செய்தி தாளில் 35 பேர் உயிரிழந்ததாக வந்துள்ள செய்தி தவறானது என்றார். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை பொருத்தவரை திடீரென மழைக்கு வாய்ப்புள்ளது. மழை மேகங்களைப் பொறுத்து அவ்வபோதும் வானிலை ஆய்வு மையம் கணித்து வருவதாக அமைச்சர் கூறினார். நீலகிரி, கொடைக்கானல் ஏற்காடு போன்ற சுற்றுலா தளப் பகுதிகளுக்கு மக்கள் வர வேண்டாம் எனவும் அன்றாட தேவைகளுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவதற்கு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

முழுமையான பயிர் சேதங்கள் கணக்கிடப்படவில்லை

தற்போது வரை முழுமையான பயிர் சேதங்கள் கணக்கிடப்படவில்லை என்றும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் எக்கர் நெற் பயிர் சேதமடைந்து இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். மழை முழுமையாக நின்ற பிறகு பயிர் சேதங்களை கணக்கீடு செய்யப்படும் என்றார்.

கால்நடை உயிரிழப்பு சரியாக தகவல் கிடைக்கவில்லை என்றும், மழை அதிகரிக்கும் போது கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என்றும், கால்நடைகளை பராமரித்து அதனை பாதுகாப்பாக இடங்களில் வைக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.

Source link