பற்றி எரிகிறது பிரான்ஸ் – இமானுவேல் மேக்ரானின் அடுத்த மூவ் – france protest: presidend macron admits failure – curfews in some areas

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் பிரான்ஸ் பற்றி எரிகிறது. வீதிகள் தோறும் போராட்டம், ஆர்ப்பாட்டம். சில இடங்களில் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தும் கவனம் ஈர்ப்பு

போராட்டம் காரணமாகப் பிரான்ஸ் நாட்டின் பொதுப் போக்குவரத்து, கல்வி நிலையங்கள் மற்றும் அத்தியாவசியச் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரான்ஸ் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, லிமோகஸ் நகரில் அரங்கேறிய வன்முறைகளால் பல கட்டடங்கள் சூறையாடப்பட்டன.

சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

பிரான்ஸில் சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள அதிபர் இமானுவேல் மேக்ரான், போராட்டங்கள் எல்லை மீறும் இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் அமைதி நிலை சீர்குலைந்தால் அவசர நிலை பிரகடணப்படுத்தப்படும் எனவும் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்து போராடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இளைஞர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது

பிரான்ஸில் நடைபெறும் போராட்டம் பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் இத்தாலியிலும் பரவியது. வார இறுதி நாட்களல் நடைபெறும் இந்த போராட்டங்கள்சில இடங்களில் கட்டுப்பாட்டை மீறியதால் கட்டடங்கள் தீக்கிரையாகின. பிரான்சில் நடந்த போராட்டங்களால் ஓரளவு தூண்டப்பட்டதாகவும், அதிகரித்து வரும் கல்வி கட்டணங்களால் உயர்கல்வியை எளிதில் அணுக முடியாததாக மாற்றிவிடும் என்று இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஐரோப்பாவில் பரவிய போராட்டம் – ரப்பர் குண்டுகளால் சுடப்பட்ட மாணவர்கள்

இத்தாலியின் மிலனில், அதிக வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி வன்முறையாக மாறியது; காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். பொலோக்னாவில் நடந்த போராட்டத்தில், காவல்துறையினர்கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாகவும், பலரைக் கைது செய்ததாகவும் ANSA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்பேனியாவில், பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரி ஐந்தாவது நாளாக நடைபெற்ற மாபெரும் மாணவர் போராட்டத்தின்போது, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

Source link