பள்ளி மாணவர்களே ரெடியா இருங்க: சென்னையில் வெளுக்கும் மழை – விடுமுறை நீட்டிக்கப்படுமா? – chennai heavy rain alert school holiday extension expected as rainfall intensifies

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு கிட்டத்தட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் எதிர்பார்த்தபடியே பருவமழையின் தாக்கம் கடலோரப் பகுதிகளில் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மேலும், அதிகாலை வரை மழை நீடிக்கும் என அவர் ஏற்கனவே கணித்திருந்த சூழலில், மாணவர்களின் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை

சென்னையிலும் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பதிவாகி இருக்கிறது.

நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்பு

இன்று மதியம் டெல்டா வெதர்மேன், நள்ளிரவு மற்றும் அதிகாலை வரை பல கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் அவர் எதிர்பார்த்தபடி பரவலாக மழை வலுக்கத் தொடங்கியிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடையுமா?

டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை மேகக் கூட்டங்கள் உருவாகி வருகின்றன. ஏற்கனவே உருவாகியிருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா நோக்கி நகரும் நிலையில், இரவு நேரத்தின் பிற்பகுதி மற்றும் அதிகாலை நேரங்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி விடுமுறை நீட்டிக்கப்படுமா?

ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டி நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று இரவு மன்னார் வளைகுடா நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை வரை பரவலாகப் பெய்யக்கூடும் என ஏற்கனவே டெல்டா வெதர்மேன் கணித்திருந்தார்.

அந்த வகையில், எதிர்பார்த்தபடியே வடகோடி மாவட்டங்களில் ஆங்காங்கே விட்டுவிட்டு இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

Source link