உண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி. கூட்டணித் தலைவர்கள் டெல்லிக்குச் சென்றாலே அது குழப்பம் என்று விமர்சிக்கும் திமுகவினர், தங்கள் கூட்டணியில் நடக்கும் அவலங்களைக் கவனிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார் என்றால் அதில் என்ன தவறு?
ஆனால், திமுக கூட்டணியில் நிலைமை என்ன? 6 தொகுதிகள் கேட்ட மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மிரட்டி, தொகுதிகளைக் குறைத்திருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள்.
